அயோத்தி சீதாவுக்கு வாழை நார் புடவை… அனகாப்புத்தூர் நெசவு குழு அசத்தல்… !

த்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி திங்கட்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பரிசு பொருட்களை குவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் இயற்கை நார் நெசவு குழுமம் செயல்பட்டு வருகிறது. வாழை, கற்றாழை, அன்னாசி, மூங்கில் இவைகளில் இருந்து நாரை பிரித்தெடுத்து அதிலிருந்து புடவை, கைப்பை, பேண்ட், ஷர்ட் போன்ற பொருட்களை தயாரித்து வருகின்றனர்.

இங்கு தயார் செய்யப்படும் பொருட்கள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில் அனகாபுத்தூர் இயற்கை நார் நெசவு குழுமம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வாழைநார் புடவையை தயார் செய்து அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதற்காக கடந்த 10 நாட்களாக இரவு பகலாக புடவையை நெய்து ராமர் கோயில் வடிவமைப்புடன் கூடிய புடவையை தயார் செய்தனர்.20 அடி நீளம், 4 அடி அகலத்துடன் உள்ள இந்த புடவையை தமிழ்நாடு வாழை உற்பத்தி சங்கம் மூலம் அயோத்திக்கு அனுப்பி உள்ளனர்.

சீதா தேவிக்கு சாற்றுவதற்காக இந்த வாழை நார் புடவை பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது .அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான 7 நாள் சடங்குகள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கோயில் கருவறையில் ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த பிரம்மாண்ட விழாவில் மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சாமியார்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்தியாவின் பிற முக்கிய பிரமுகர்கள், சினிமா விளையாட்டு பிரபலங்கள் தொழிலதிபர்கள் உட்பட 8000 பேருக்கு இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *