Christmas Special Cake : கேரளா ஸ்பெஷல் கேக்! இந்த கிறிஸ்துமஸ்க்கு செஞ்சு அசத்திடுங்க!
தேவையான பொருட்கள்
மைதா – ஒரு கப்
முந்திரி – அரை கப்
கருப்பு உலர் திராட்சை – கால் கப்
உலர் பழங்கள் – அரை கப் (பேரிச்சை, செரிகள், ஆரஞ்சு பழத்தோல்)
சர்க்கரை – ஒன்னேகால் கப்
(அரை கப் சுகர் சிரப் செய்வதற்கு, முக்கால் கப் கேக் மாவில் சேர்க்க)
வெண்ணெய் – 3ல் 2 பங்கு
முட்டை – 3
பட்டைப்பொடி – அரை ஸ்பூன்
கிராம்பு பொடி – கால் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெண்ணிலா எசன்ஸ் – கால் ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் மிதமான தீயில் அரை கப் சர்க்கரையை சூடாக்க வேண்டும்.
அது முதலில் கரைந்து பின்னர் பிரவுன் நிறத்திற்கு வரும். தொடர்ந்து கிளற கேரமல் நிறத்துக்கு வரும். கருக்கிவிடாதீர்கள்
அடுப்பை அணைத்துவிட்டு, கால் கப் தண்ணீர் சேர்த்துக்கொண்டால், சர்க்கரை கடினமாகிவிடும்.
இப்போது அடுப்பை மீண்டும் பற்றவைத்து சர்க்கரையை கரைக்க வேண்டும். இதற்கு 10 நிமிடங்கள் தேவைப்படும். முடிந்ததும் ஆறவைத்துவிடுங்கள்.
அவனை 180 டிகிரி செல்சியஸ்க்கு ப்ரீ ஹீட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
இதில் 3 டேபிள் ஸ்பூன் மாவு சேர்த்து உலர் பழங்களை நன்றாக கலந்துககொள்ளுங்கள். அப்போதுதான் சேர்க்கப்படும் உலர் பழங்கள் அடியில் சென்று மொத்தமாக தங்கிவிடாது. கேக் முழுவதும் பரவிவரும்.
பின்னர் மாவு, பேக்கிங் பவுடர், மசாலா, உப்பு என அனைத்தும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.