மிதுன ராசிக்கு.. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.. போட்டி பொறாமைகள் விலகும்..!!
மிதுனம் ராசி அன்பர்களே,
இந்த நாள் உடல் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வரவும் செலவும் சமமாக இருக்கும்.
தேவைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு பெருமை அடைவீர்கள். பணவரவு சீராக இருக்கும். செயல்களுக்கு இருந்த தடைகள் விலகும். தடை ஏற்படுத்தியவர்களும் பிரிந்து செல்வார்கள்.
வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். போட்டி பொறாமைகள் விலகிச் செல்லும். குடும்பத்தினருடன் நேரம் செலவீடுவீர்கள். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டுகளை தருவீர்கள். பெண்களுக்கு இன்று எந்த பிரச்சினையும் இருக்காது.
தேவைகளை பூர்த்தி செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். திருமண வரன்கள் அமையும். இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். கல்வி மீது முழு அக்கறை கொள்ள வேண்டும். இந்த இனிய காணும் பொங்கல் தினத்தில் செல்வம் பெருகட்டும் மகிழ்ச்சி அதிகரிக்கட்டும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: ஆறு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்