188க்கு ஆல் அவுட்.. முதல் முறையாக ஓப்பனிங்கில் வந்த ஸ்டீவ் ஸ்மித்தை செய்த அறிமுக வெ.இ வீரர்
அதில் முதலாவதாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 17ஆம் தேதி துவங்கியது. அடிலெய்ட் நகரில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் எதிர்பார்த்தது போலவே தரமான ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கிர்க் மெக்கன்சி 50 ரன்களும் 11வது இடத்தில் களமிறங்கிய அறிமுக வீரர் சமர் ஜோசப் முக்கியமான 36 ரன்களும் எடுத்தனர்.
ஸ்மித்துக்கு ஏமாற்றம்:
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 4, ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்களை எடுத்தார்கள். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் துவக்க வீரராக களமிறங்கினார். தம்முடைய கேரியரை ஸ்பின் பவுலராக துவங்கிய அவர் ஆரம்ப காலங்களில் 9வது இடத்தில் விளையாடினார்.
ஆனால் அதன் பின் பேட்ஸ்மேனாக மாறிய அவர் பெரும்பாலும் 4வது இடத்தில் பேட்டிங் செய்து விராட் கோலி போன்ற வீரர்களுக்கு நிகராக அபாரமாக செயல்பட்டு வருகிறார். அப்படிப்பட்ட
சூழ்நிலையில் சமீபத்திய பாகிஸ்தான் தொடருடன் ஓய்வு பெற்ற டேவிட் வார்னருக்கு பதிலாக இந்த தொடரில் ஓப்பனிங்கில் களமிறங்கிய அவர் அதிரடியாக விளையாடாமல் வழக்கம் போல மெதுவான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.