“சஞ்சு சாம்சன் இன்று விளையாட கூடாது.. அது அநீதியான விஷயம்” – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு போட்டிகளையும் வென்று இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது.
இதன் காரணமாக இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்க இருக்கும் மூன்றாவது டி20 போட்டியில், முதல் இரண்டு போட்டியில் வாய்ப்பு தரப்படாத இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு தரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகையில் எடுத்துக் கொண்டால் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோர் விளையாட வைக்கப்படலாம்.
ஆனால் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சனை விளையாட வைப்பது சரியானது கிடையாது என்றும், அதற்கான காரணங்கள் என்னவென்று கூறி இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நீங்கள் ஜித்தேஷ் மற்றும் சஞ்சு சாம்சனை ஆறாவது இடத்தில் வைத்திருக்க வேண்டுமா? என்பது தான் முதல் கேள்வி. ஜித்தேஷ் தன்னுடைய இடத்தை முழுவதுமாக உறுதிப்படுத்தி இருந்தால், அவர் பெயருக்கு முன்னால் ஒரு கேள்விக்குறியே இருக்காது. அவர் நிச்சயம் உலகக்கோப்பைக்கு செல்வார். நீங்கள் அப்பொழுது சஞ்சு பற்றி யோசித்து இருக்கலாம். ஆனால் ஜித்தேஷ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.