Swiggy-க்கு ஷாக் கொடுத்த சென்னைவாசி.. ரூ.31000-க்கு ஆர்டர்.. அப்படி என்ன வாங்கியிருக்கார்..?
2023 ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், ஸ்விக்கி தனது வருடாந்திர ‘ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் டிரென்ஸ் 2023’ அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கை ஸ்விக்கி நிறுவனத்திற்கு எவ்வளவு முக்கியமே அதை விட வர்த்தகச் சந்தைக்கும், தொழிலதிபர்களுக்கும் முக்கியம். அதாவது மக்களின் செலவு செய்யும் போக்கை கண்டறிய இது எளிய கருவியாக இருக்கும்.
மக்களின் விருப்பைத் தெரிந்துக்கொள்ளப் பல தொழிலதிபர்கள் தெருக்களில் இருக்கும் குப்பை தொட்டையைத் தேடிய பல கதைகள் உண்டு. இப்போது டிஜிட்டல் வடிவில் டேட்டா உங்க கைகளுக்கே வருகிறது, இதேவிட வேறு என்ன வேணும் சொல்லுங்க.
ஸ்விக்கி நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு முன்பு மளிகை பொருட்கள், காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள் முதல் காண்டம் வரையில் மக்களுக்கு அடிப்படையாகத் தேவைப்படும் அனைத்து பொருட்களையும் தனது இன்ஸ்டாமார்ட் தளத்தில் விற்பனை செய்யத் துவங்கியது. முதல் நாளில் வெறும் 67 ஆர்டர்களை மட்டுமே பெற்ற நிலையில் இன்று நாட்டில் 12 நகரங்களில் தனது பொருட்களை விற்கிறது.
ஆர்டர் செய்யப்பட்ட 15- 20 நிமிடத்தில் பொருட்களை டெலிவரி செய்கிறது. வாய்ப்புகள் அதிகரிக்க மக்களின் போக்கு மாறுப்படும், அந்த வகையில் 2023ல் ஸ்விக்கி வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்கிய பொருட்கள் மற்றும் அதிகம் வாங்கிய நபர் எனப் பல தரவுகளை வெளியிட்டு உள்ளது. இதை இப்போது பார்ப்போம். ஸ்விக்கி தளத்தை ஆரம்பத்தில் ஸ்னாஸ் வாங்கும் தளமாக இருந்தது ஆனால் இப்போது நிலை தலைகீழாக மாறியுள்ளது.
சென்னைவாசி ஒருவர் 2023ஆம் ஆண்டுக் காபி, ஜூஸ், குக்கீகள், நாச்சோஸ் மற்றும் சிப்ஸ் போன்ற பல்வேறு பல உணவுகளைச் சுமார் ரூ. 31,748 ரூபாய்க்கு ஆர்டர் செய்து அதிக மதிப்பிற்குப் பொருட்களை வாங்கியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வீட்டின் முன் குவிந்த ஸ்விக்கி டெலிவரி ஊழியர்கள்! திகைத்துப்போன கார்ப்பரேட் ஊழியர்.. என்ன நடந்தது?!
இதேபோல் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒருவர் ஒரே நாளில் 67 ஆர்டர்களைச் செய்து சாதனை படைத்தார், மேலும் டெல்லியை சேர்ந்த ஒருவர் இந்த வருடம் 12.87 லட்சம் ரூபாய்க்கு மளிகை பொருட்களை வாங்கிச் சுமார் 1.70 ரூபாயை சேமித்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது. மற்றொரு டெல்லிகாரர் ஓரே ஆர்டரில் 99 பொருட்ரளை ஆர்டர் செய்துள்ளார்.
ஸ்விக்கி கடந்த வாரம் தனது உணவு டெலிவரி தளத்தின் 8வது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது, இதில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பட்டியலில் முதலிடத்தில் பிரியாணி தேர்வாகியுள்ளது. இதோடு ஹைதராபாத் நபர் ஒருவர் இந்த ஆண்டு 1,633 பிரியாணிகளை ஆர்டர் செய்து பிரியாணி வெறியர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார் எனவும் அறிவித்துள்ளார்.