Sani Rahu: சனி சொல்வதை செய்வார்.. யோகக்காரர்கள் இந்த ராசிகள் தான்
சனி பகவான் நீதிமானாக விளங்குபவர் ஒரு ராசியில் எடுத்த மற்றும் ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் இவர்தான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை.
கர்மநாயகனாக விளங்கக்கூடிய இவர், நன்மை மற்றும் தீமைகள் என பாரபட்சம் இல்லாமல் அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். சனி பகவானின் ஒவ்வொரு இடமாற்றமும் மிகவும் கவனமாக பார்க்கப்படுகிறது.
30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த நவம்பர் 24ஆம் தேதி அன்று சனி பகவான் ராகு பகவானின் சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் புகுந்தார்.
சனிபகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நிகழ உள்ளது. தொடர்ந்து ஐந்து மாத காலம் இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் பயணம் செய்ய உள்ளார். இதன் காரணமாக சில ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
ரிஷப ராசி
சனி பகவானின் நட்சத்திர இடமாற்றமானது உங்களுக்கு வெற்றிகளை கொட்டிக் குவிக்கப் போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிவர்த்தி அடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
மேஷ ராசி
சனிபகவான் உங்களுக்கு நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி தர போகின்றார். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்புமுனைகள் ஏற்படும் அது நன்மையாகவே முடிவடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த உடல் சிக்கல்கள் நல்ல நிலைமைக்கு வரும்.
சிம்ம ராசி
காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகப் போகின்றது. சனி பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் எதிர்பாராத நேரத்தில் பணவரவு உங்களுக்கு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மொத்தத்தில் நல்ல பலன்கள் உங்களை தேடி வரும்.