வி.சி.க. எம்.எல்.ஏ. பெயரில் பணம் கேட்டு மோசடி! மக்களை அலர்ட் செய்த சட்டமன்ற உறுப்பினர்!
நூதன வழியில் நடைபெறும் ஆன்லைன் மோசடியால் பல தரப்பட்ட மக்களும் பாதிப்படைந்து வருகிறது. ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் தொடங்கி உச்ச அதிகாரத்தில் இருக்கும் நபர்களுக்கும் இதில் விதிவிலக்கு இல்லை.
எம்.எல்.ஏ. பெயரில் மோசடி:
இந்தநிலையில் தமிழ்நாட்டில் முக்கிய கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். பாலாஜி பெயரில் போலி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில்
தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும், அரசியல் பிரமுகர்கள் இவரும் ஒருவர். சாதாரண தொண்டருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தை கூட சமூக வலைதளத்தில், பதிவேற்றுவதால் அவருக்கு தனி ரசிகர் கூட்டம் சமூக வலைதளத்தில் உள்ளது.
இந்நிலையில் தான் நேற்று முதல் அவரவருடைய பெயரில் போலி கணக்கு துவங்கப்பட்டு , பலருக்கு நட்பு அழைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று வாட்ஸ் அப்பிலும் அவரது புகைப்படம் வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட சில எண்களில் இருந்து பணம் கேட்டு வருகின்றனர்.