மகாராணியார் குறித்து ஹரி கூறிய பொய்… தற்போது வெளியாகியுள்ள உண்மை: மகிழ்ச்சியில் அரண்மனை ஊழியர்கள்

மகாராணியாரின் செல்லப்பெயரை, அவரது அனுமதியை பெற்றே தங்கள் மகளுக்கு வைத்ததாக ஹரி மேகன் தம்பதியர் கூறியிருந்த நிலையில், அது உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.

மன்னரை குறித்து எழுதப்பட்டுள்ள புதிய புத்தகம்

ராஜ குடும்ப எழுத்தாளரான Robert Hardman என்பவர், மன்னர் சார்லசின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த புத்தகத்திலிருந்து, மகாராணியாரின் செல்லப்பெயரை, அவரது அனுமதியை பெற்றே தங்கள் மகளுக்கு வைத்ததாக ஹரி மேகன் தம்பதியர் கூறிய விடயத்தில் உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.

உண்மையில், தன் செல்லப்பெயரை ஹரி மேகன் தம்பதியர் தங்கள் மகளுக்கு வைத்தது தெரிந்ததும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மகாராணியார் ஆத்திரம் அடைந்தாராம்.

எனக்கென்று சொந்தமாக மாளிகைகள் இல்லை, எனக்கென்று ஓவியங்கள் இல்லை, எனக்கென சொந்தமாக இருந்தது என் பெயர் மட்டும்தான், அதையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள் என்று கூறி, கடும் கோபமடைந்தாராம் மகாராணி இரண்டாம் எலிசபெத்.

விடயம் என்னவென்றால், மகாராணியாரின் செல்லப்பெயர் லிலிபெட் என்பதாகும், அவரது தந்தைக்குப் பிறகு, மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் மட்டும்தான் தன்னை அந்தப் பெயரால் அழைப்பார் என்பதால், மகாராணியார் லிலிபெட் என்ற தனது செல்லப்பெயருக்கு சென்டிமெண்ட் பார்ப்பாராம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *