2-அடி நீளம்., பிரித்தானியாவில் பேரழிவை ஏற்படுத்திவரும் ராட்சத எலிகள்., மக்கள் கவலை
தூய்மையான நாடுகள் என்றாலே, ஐரோப்பாவும், பிரித்தானியாவும் தான் நினைவுக்கு வரும். ஆனால் இன்று பிரித்தானியா அதன் அசுத்தத்தால் கலக்கமடைந்துள்ளது.
பிரித்தானியா தற்போது எலிகளால் சிரமப்பட்டு வருகிறது. இவை சாதாரண எலிகள் அல்ல, அவற்றின் அளவு சாதாரண எலிகளை விட பாரியது.
2-அடி நீளம் கொண்ட மரபணு மாற்றமடைந்த எலிகள்
பெரும்பாலான எலிகள் 2-அடி நீளம் கொண்டதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென வந்துள்ள இந்த புதிய எலிகள் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குப்பைத் தொட்டிகள் சேகரிப்பதில் ஏற்பட்ட தாமதம்தான் எலிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கக் காரணமாக கருதப்படுகிறது. சுத்தமின்மையால் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 90 நாட்களில் இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்க உதவி தேடுபவர்களின் எண்ணிக்கை 115 சதவீதம் அதிகரித்துள்ளது என்று British Pest Control Association கூறுகிறது.
பிரித்தானியாவில் சுமார் 25 கோடி எலிகள் வாழ்வதாக நம்பப்படுகிறது, இது இங்கிலாந்தின் மக்கள் தொகையான 6.75 கோடியை விட அதிகம். தற்போது குளிர் காரணமாக வீடுகளுக்குள் எலிகள் நுழைய ஆரம்பித்துள்ளது மிகவும் கவலைக்குரிய விடயம்.