லண்டன் மேயர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் போட்டி

மூன்றாவது முறையாக லண்டன் மேயர் பதவிக்கு போட்டியிடவுள்ள பாகிஸ்தான் வம்சாவளி மேயர் சாதிக் கானுக்கு அவர்கள் கடும் சவாலாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

63 வயதான தொழிலதிபர் தருண் குலாட்டி (Tarun Ghulati) மற்றும் 62 வயதான சொத்து தொழிலதிபர் ஷியாம் பாட்டியா (Shyam Bhatia) ஆகியோர் மே 2 மேயர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

குலாட்டி கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிற்கு வந்திருந்தபோது தனது மேயர் பிரச்சாரத்தை தொடங்கினார். அவர் தனது பிரசாரத்தில் “trust and growth” என்ற டேக் லைனை பயன்படுத்துகிறார்.

அதேபோல், பாட்டியா ‘ambassador of hope’ என்ற டேக் லைனுடன் பிரச்சாரம் செய்கிறார்.

டெல்லியில் பிறந்த குலாட்டி, லண்டனின் தற்போதைய மேயர் சாதிக் கான் மக்கள் ஆதரவை இழந்துவிட்டதாகவும், மற்றொரு பாரிய கட்சி நிறுத்தும் வேட்பாளரை வாக்காளர்கள் நம்பவில்லை என்றும் கூறினார்.

இந்தியாவில் மேயர் வேட்பாளர் பிரசாரத்தை துவங்கியது குறித்து பேசிய தருண் குலாட்டி, “இந்தியா எனது பூர்வீகம், நான் பிறந்த இடம், லண்டன் எனது கர்ம பூமி, நான் எனது வேலையைச் செய்யும் இடம். பெரியவர்கள், பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளின் ஆசிகள் எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதனால்தான் இந்தியாவில் இருந்தே பிரசாரத்தை மேற்கொள்ள முடிவு செய்தேன்’ என கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *