சீரியல் நடிகரை காதல் திருமணம் செய்யும் சுவாசிகா விஜய்
மலையாள திரையுலகில் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை சுவாசிகா விஜய். இவர் தமிழுக்கு ஒன்றும் புதியவர் அல்ல.
சொல்லப்போனால் சினிமாவில் இவர் அறிமுகமானதே வைகை என்கிற தமிழ்ப்படத்தில் தான். அதைத்தொடர்ந்து தமிழில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் மலையாள திரையுலகில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். தற்போது மீண்டும் தமிழில் லப்பர் பந்து என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சுவாசிகா.
இந்த நிலையில் இவர் தனது காதலரும் மாடலிங் இளைஞருமான கேரளாவை சேர்ந்த பிரேம் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களது திருமணம் வரும் ஜனவரி 26ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கிறது என்றும், மறுநாள் ஜனவரி 27 கொச்சியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளதுபிரேம் ஜேக்கப் மாடலிங் மட்டுமில்லாது சின்னத்திரையிலும் ஒரு நடிகராக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 2020 முதல் ஒளிபரப்பான மனம் போலே மாங்கல்யம் என்கிற தொடரில் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் அவ்வப்போது மிக நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் ரீல்ஸ் வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார் சுவாசிகா விஜய்.