காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மக்கள் அறிக்கையாக இருக்கும் – ப.சிதம்பரம்..!
காங்கிரஸ் கட்சியின் 2024 மக்களவைத் தேர்தல் அறிக்கை “மக்கள் அறிக்கையாக” இருக்கும், அதற்கான ஆலோசனைகளுக்காக நாடு முழுவதும் பயிற்சி மேற்கொள்ளப்படும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், தேர்தல் அறிக்கை தொடர்பான ஆலோசனைகளை சேகரிப்பதற்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
. awaazbharatki.in என்ற இணையதளத்தையும், awaazbharatki@inc.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. அந்த இணையதளங்களிலும் , இணை முகவரியிலும் மக்கள் தங்கள் ஆலோசனைகளை அனுப்பலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறினார்.
மின்னஞ்சல் மூலம் தங்கள் பரிந்துரைகளை அனுப்புமாறு இந்திய மக்களை காங்கிரஸ் கேட்டுக் கொள்வதாக ப.சிதம்பரம் கூறினார். எனவே மக்கள் அனுப்பும் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை இணைத்து மக்கள் அறிக்கையாக மாற்ற இது உதவும் என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர், கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரியங்கா காந்தி மற்றும் டி.எஸ். டியோ உள்ளிட்ட 15 பேர் இடம்பெற்றுள்ளதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சி பொது ஆலோசனைகளை நடத்தும் என்றும், குழு உறுப்பினர்கள் மக்கள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்களுடன் உரையாடுவார்கள் என்றும் ப.சிதம்பரம் கூறினார். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் ஆலோசனைகளை வழங்கவும், தேசத்தை கட்டியெழுப்புவதில் ஒரு பகுதியாகவும் இருக்க வேண்டும் என ப.சிதம்பரம்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பின்னர் பேசிய, காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், மக்கள் தங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் பின் குறியீடுகளை வழங்கிய பிறகு, இணையதளத்தில் தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம் என்று கூறினார். மக்களின் குரலுக்கு செவிசாய்க்கும் பணியை தாங்கள் எப்போது செய்து வருகிறோம் என குறிப்பிட்ட அவர், பாரத் ஜடோ யாத்திரை மற்றும் பராத் நியாய யாத்திரை இதன் விரிவாக்கம் என்றார்.