ஐபோன் 15 வாங்க சரியான நேரம் : ஃபிளிப்கார்ட் ரிபப்ளிக் டே சேலில் அதிரடி ஆஃபர்!
ஐபோன் வாங்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் ஐபோன் வாங்குவது சாதாரண காரியம் அல்ல. ஐபோன் என்றாலே விலைவு அதிகமாக இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒருவேளை உங்களுக்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்க ஆசை இருந்து உங்களால் அதன் அதிகபட்ச விலையான 79, 900 ரூபாய் செலுத்தி அதனை வாங்க முடியாது என்றாலும் கூட நீங்கள் இந்த ஐபோனை வாங்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா?
ஆம், உண்மைதான். ஐபோன் 15 வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம். ஃபிளிப்கார்ட்டில் ஐபோன் 15க்கு கிட்டத்தட்ட 15,000 ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டு வருகிறது . ஃபிளிப்கார்ட் ரிபப்ளிக் டே சேல் ஜனவரி 13 முதல் 19 வரை நடைபெறுகிறது. இதில் நீங்கள் ஐபோன் 15ஐ 64,999 ரூபாய்க்கு வாங்கலாம்.
இந்த ஆஃபர் தற்காலிகமானது என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நேரத்திற்கு தகுந்தார் போல் ஆஃபர் நிச்சயமாக மாறலாம். இப்பொழுது இந்த ஆஃபரை எப்படி பெற்றுக்கொள்வது என்பது குறித்து சில விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ஐபோன் 15 ஐ 64,999 ரூபாய்க்கு எப்படி வாங்குவது?
உங்களிடம் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு இருந்தால் மட்டுமே நீங்கள் ஐபோன் 15 ஐ 64, 999 ரூபாய்க்கு வாங்கலாம். ஒருவேளை உங்களிடம் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு இல்லை என்றால் கவலைப்படாதீர்கள். உங்களுக்காகவும் ஃபிளிப்கார்ட் அசல் விலையில் இருந்து கிட்டத்தட்ட 12,000 ரூபாய் டிஸ்கவுண்டை வழங்குகிறது. அதாவது இந்த ஆஃபர் விலையை பெறுவதற்கு நீங்கள் எந்த ஒரு கார்டையும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் நிச்சயமாக உங்களிடம் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு இருந்தால் கூடுதலாக 2000 ரூபாய் டிஸ்கவுண்ட் பெற்று 66, 999 ரூபாயிலிருந்து நீங்கள் ஐபோனை 64, 999 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். அதே நேரத்தில் ஹேண்ட்லிங் மற்றும் பேக்கேஜ் கட்டணமாக ஃபிளிப்கார்ட் உங்களிடம் இருந்து 49 மற்றும் 99 ரூபாய் முறையே வசூலிக்கும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் பயன்படுத்தி ஐபோன் வாங்குகிறீர்கள் என்றால் உங்களது இறுதி செக்அவுட் தொகை 65, 147 ரூபாயாக இருக்கும்.
ஐபோனை வாங்குவது நல்ல யோசனையா?
இந்த விலையில் ஐபோனை வாங்குவது நல்ல முடிவாக இருக்குமா என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மையில் ஐபோன் 15 இதைவிட குறைவான விலையில் இதுவரை விற்பனையானது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இது லேட்டஸ்ட் வெண்ணிலா ஐபோன் மாடல் என்பதால் இப்போது இருந்து வரக்கூடிய 5 முதல் 6 வருடங்களுக்கு நிச்சயமாக இந்த போன் உங்களுக்கு நல்ல ஆதரவு கொடுக்கும். ஐபோன் 15 இல் டைனமிக் ஐலேண்ட், 24-மெகா பிக்சல் ஸ்டில் இமேஜ்கள் மற்றும் USB-C போன்ற புதிய அம்சங்கள் உள்ளது. ஃபாஸ்ட் A16 பயானிக் சிப்செட் மூலமாக ஐபோன் விரைவாகவும், அதே நேரத்தில் ஸ்மூத்தாகவும் இயங்குகிறது.