சொன்னீர்களே… செய்தீர்களா ?திமுக அரசுக்கு நினைவுபடுத்திய எடப்பாடி பழனிசாமி !

மகளிர் உரிமைத் தொகை தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ளனர்.புதிய ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்பட்ட பின்னர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போதுள்ள பயனாளர்கள் எண்ணிக்கை படியே தமிழக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 13 ஆயிரத்து 800 கோடி ரூபாய் பணம் இந்த ஒரு திட்டத்துக்கு தேவைப்படும். இவ்வளவு அதிக பயனாளர்களைக் கொண்ட, இவ்வளவு அதிக பொருட்செலவு கொண்ட திட்டம் வேறு இல்லை.இதனால் பிற திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கல் எழலாம் என்கிறார்கள் பொருளாதார புள்ளிகள்.

இது இப்படியிருக்க ஜல்லிக் கட்டு வீரருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாகவும் ஆனால் அதை செயல்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” எனும் கூற்றுக்கு ஏற்ப உலகை வழிநடத்தும் உழவுத் தொழில் செய்யும் உழவர் பெருமக்களுக்கும், அந்த உழவுக்கு துணை நிற்கும் மாடுகளுக்கும் இந்த உழவர் திருநாளில் எனது நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன்,

ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆன இந்த திமுக அரசு தமிழகத்தின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *