IND vs AFG : டி20 வரலாற்றில் பிரம்மாண்ட சாதனை படைத்த இந்தியா.. பாகிஸ்தான் ரெக்கார்டு காலி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை 3 – 0 என இந்தியா கைப்பற்றியது. அதன் மூலம் பாகிஸ்தான் அணியின் டி20 சாதனையை உடைத்து எறிந்தது இந்தியா. மேலும், பாகிஸ்தான் அணியின் டி20 ஆதிக்கத்தை இந்தியா உடைத்துள்ளது.

பாகிஸ்தான் அணி கடந்த காலத்தில், ஷாஹித் அப்ரிடி ஆகியோர் அணியில் இருந்த போது டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. அதிக டி20 போட்டிகளில் ஆடிய அந்த அணி வெற்றிகளை குவித்து நம்பர் 1 டி20 அணியாகவும் வலம் வந்தது. ஆனால், தற்போது பாகிஸ்தான் அணியின் நிலைமை தலைகீழாக உள்ளது.

அதே சமயம், டி20 போட்டிகளை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்த இந்திய அணி கடந்த 4 – 5 ஆண்டுகளில் அதில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் அதிக டி20 தொடர் வைட்வாஷ் வெற்றி என்ற முக்கிய சாதனையை இந்தியா காலி செய்துள்ளது. அதாவது ஒரு டி20 தொடரின் அனைத்து போட்டிகளிலும் வென்று, எதிரணியை ஒரு போட்டியில் கூட வெற்றி பெற விடாமல் தோற்கடிப்பதே வைட்வாஷ் வெற்றியாக கருதப்படுகிறது.

அந்த வகையில் ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கு முன்பு வரை இந்தியா – பாகிஸ்தான் இரு அணிகளும் தலா எட்டு டி20 தொடர் வைட்வாஷ் வெற்றிகளை பெற்று இருந்தது. தற்போது ஆப்கானிஸ்தான் அணியை 3 – 0 என வீழ்த்தி இருக்கும் இந்திய அணி ஒன்பதாவது டி20 வைட்வாஷ் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் டி20 தொடர்களில் அதிக வைட்வாஷ் வெற்றிகளை பெற்ற அணியாக இந்தியா மாறி உள்ளது.

முன்னதாக ஆப்கானிஸ்தான் அணியை மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி இரண்டு சூப்பர் ஓவர்களை சந்தித்து போராடி வென்று இருந்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 212 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆப்கானிஸ்தான் அணியும் 212 ரன்கள் எடுத்தது. அதன் பின் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் 16 ரன்கள் எடுத்தது. இந்திய அணியும் 16 ரன்கள் எடுக்கவே, மூன்றாவது சூப்பர் ஓவரில் இந்தியா 11 ரன்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 1 ரன் மட்டுமே எடுத்து 2 விக்கெட்களை இழந்து தோல்வியை சந்தித்தது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *