மேக் அப் இல்லாத சீரியல் நடிகை பிரியங்கா: எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க!
ரோஜா சீரியல் மூலமான பிரபலமான பிரியங்கா நல்கரி மேக்கப் இல்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் ரோஜா. டி.ஆர்.பி ரேட்டிங்கில் எப்போதும் முன்னிலையில் இருந்த இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்கரி. அவர் இந்த சீரியலின் முதன்மை கதாப்பாத்திரமான ரோஜாவாக நடித்தார். ரோஜா சீரியலுக்குப் பிறகு பிரியங்கா ஜீ தமிழ் சேனலில் சீதாராமன் சீரியலில் நாயகியாக நடித்தார். சீதா ராமன் சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் அந்த சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். பிரியங்கா தனது காதலரைத் திருமணம் செய்துக் கொண்டு வெளிநாடு சென்றுவிட்டதால், சீரியல்களில் நடிக்கமாட்டார் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், பிரியங்கா புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமானர். நள தமயந்தி எனப் பெயரிடப்பட்ட அந்த சீரியல் ஜீ தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகி வருகிறது.