கண்டாங்கி சேலையில் விஜய் டி.வி ரோஜா ஸ்ரீ: வயல்வெளியில் லேட்டஸ்ட் போட்டோஸ்
விஜய் டிவியின் ஹூம் சொல்றியா… ஹூக்கும் சொல்றியா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ரோஜா ஸ்ரீ லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி ஹூம் சொல்றியா… ஹூக்கும் சொல்றியா. மாகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கும் இந்த வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு கெஸ்ட் ரோலில் வந்து பிரபலமானவர் ரோஜா ஸ்ரீ. அவர் வந்தப் போது டி.ஜே பிளாக் அவருக்காக பாடல் போட, அதனைத் தொடர்ந்து அடுத்த எபிசோட்களில் அவர்களின் ரொமான்ஸ் லூட்டி தொடர்ந்தது.
இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரோஜா ஸ்ரீக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் சீரியல் தொடரில் முக்கிய கத்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பாரதி கண்ணம்மா 2 சீரியலிலும் நடித்துள்ளார்.