புஷ்பா 2ல் டான்ஸ் ஆடும் இளம் நடிகைக்கு ரூ.2 கோடி சம்பளமாம்

தராபாத்: சமந்தாவுக்கு பதில் புஷ்பா 2ல் டான்ஸ் ஆடும் இளம் ஹீரோயினுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரிய ஹிட் ஆன புஷ்பா படத்தில் சமந்தா ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இருந்தார். அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகி படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கி வருகின்றனர்.

புஷ்பாவில் சமந்தா டான்ஸ் ஆட 5 கோடி ருபாய் வாங்கினார் என சொல்லப்பட்டது. தற்போது 2 ம் பாகத்திலும் அவர் ஆடுவாரா என கேள்வி எழுந்தது.

இந்நிலையில் குண்டூர் காரம் படத்தில் நடித்த ஸ்ரீலீலா தான் புஷ்பா 2 படத்தின் ஸ்பெஷல் பாடலில் டான்ஸ் ஆடுகிறாராம். அதற்காக அவருக்கு ரூ. 2 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *