இதென்ன புதுசா.. நிர்மலா சீதாராமனுக்கு எதிராக ஜிஎஸ்டி துணை கமிஷ்னர் உண்ணாவிரதம்.. ஷாக்கிங் காரணம்
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகக்கோரி சென்னையில் ஜிஎஸ்டி மற்றும் கலால் துறை துணை ஆணையர் பாலமுருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதற்கு அவர் முக்கியமான காரணம் ஒன்றையும் தெரிவித்துள்ளார்.
2 ஏழை விவசாயிகளுக்கு எதிராக அமலாக்கத்துறையில் பதிந்த வழக்கை ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜாதி பெயருடன் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் சர்ச்சை ஆனது. சம்மன் அனுப்பியது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் அமலாக்கத்துறை புது முடிவு எடுத்துள்ளதாம். அமலாக்கத்துறையில் பதிந்த வழக்கை ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்பே இந்த வழக்கை கைவிட அமலாக்கத்துறை முடிவு செய்து இருந்தாலும்.. இன்னும் அது தொடர்பான வெளிப்படையான அறிவிப்பு வரவில்லை.
சர்ச்சை: விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அப்பம்மா சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களுக்குத்தான் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
என்ன நடந்தது?: இவர்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் என்பவர் தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குணசேகரனுக்கு எதிராக இவர்கள் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கிற்கு இடையேதான் இரண்டு விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
அமலாக்கத்துறை சம்மன்: சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வந்து ஆஜராகும்படி, விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணனுக்கு கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது . ஜூன் மாதம் அனுப்பப்பட்ட இந்த சம்மன் சர்ச்சையாக காரணம்.. அந்த சம்மனில் வீட்டு எண் உள்ளிட்ட விவரங்களுடன் ஜாதி பெயரும் இருந்தது.