எந்த ஆவணமும் இல்லாமல் ரூ.8 லட்சம் வரை கடன் பெறலாம். GPay பயனர்களுக்கு புதிய அம்சம்…!!!!
இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் பண பரிமாற்றங்களுக்கு அதிக அளவு கூகுள் பே செயலி பயன்படுத்தப்படுகிறது.
இந்த செயலி மூலமாக கடன் பெற முடியும் என்ற தகவல் பலருக்கும் தெரியாமல் உள்ளது. அதாவது google pay மூலம் பயனர்கள் எளிதில் லோன் பெறலாம். பயணர்களின் பரிவர்த்தனை தகுதியின் அடிப்படையில் பத்தாயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 8 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். முழுவதுமாக டிஜிட்டல் முறையில் நேரடியாக வங்கி கணக்கில் பணமும் செலுத்தப்படும்.
இதற்கு பயனர்கள் எந்தவித அவமானமும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதற்கான மாதாந்திர இஎம்ஐ ஆயிரம் ரூபாய் இருந்து தொடங்குகிறது. நீங்கள் தேர்வு செய்யும் காலத்தைப் பொறுத்து இஎம்ஐ தொகையும் மாறுபடும். ஆறு மாதங்கள் முதல் நான்கு ஆண்டுகள் வரை இஎம்ஐ செலுத்தும் வசதியை தேர்ந்தெடுக்கலாம். மேலும் 13.99 சதவீதம் முதல் வட்டி விகிதம் உள்ளது. கூகுள் பே நேரடியாக இந்த கடனை வழங்காது. DMI பைனான்ஸ் மூலமாக கடன் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.