3வது நாளாக அதிரடி சரிவு… இன்றைய தங்கம் நிலவரம் பாருங்க!
Gold-rate: இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது.
இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இன்றைய தங்கம் விலை
கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 அதிரடியாக அதிகரித்து. ஆனால், மறுநாள் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 160 சரிந்தது. இதேபோல், நேற்று புதன்கிழமையும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 சரிந்து ஒரு சவரன் ரூ.46,480-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,810-க்கும் விற்பனை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக சரிந்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 சரிந்து ஒரு சவரன் ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,305-க்கும், ஒரு சவரன் ரூ. 50,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.