வலிமையான கரன்சி பட்டியலில் அமெரிக்க டாலர் கடைசி இடம்… அப்போ இந்தியாவிற்கு ?

ர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாக கரன்சி கருதப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை காட்டுகிறது.

கரன்சி வளரும்போது, நாட்டின் பொருளாதாரமும் வளர்கிறது. இது முதலீடுகளை ஈர்க்கிறது மற்றும் உலகளவில் உறவுகளை ஊக்குவிக்கிறது. சில நாணயங்கள் பிரபலமாக இருந்தும், பரவலாகப் பயன்பாட்டில் இருப்பினும் அவற்றின் மதிப்பு மற்றும் வலிமை குறைவாகவே இருக்கிறது.

அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் உலகின் வலிமையான பத்து கரன்சி பட்டியலையும், அவற்றின் வெற்றிக்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது. குவைத் தினார் ரூ.270.23 மற்றும் $3.25 என்ற மதிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. பஹ்ரைன் தினார் ரூ.220.4 மற்றும் $2.65 மதிப்பில் 2-வது இடத்தில் இருக்கிறது. ஓமானி ரியால் ரூ.215.84 மற்றும் $2.60 விலையில் மூன்றாவது அதிக மதிப்புடையது. அதைத் தொடர்ந்து ஜிப்ரால்டர் பவுண்ட், பிரிட்டிஷ் பவுண்ட், கேமன் தீவுகள் டாலர், சுவிஸ் பிராங்க் மற்றும் யூரோ போன்ற கரன்சிகள் பட்டியலில் வரிசைப்படுத்தபட்டு இருக்கிறது.

மிகவும் பரவலாக வர்த்தகம் செய்யப்பட்டும், முதன்மை இருப்பு நாணயமாக இருந்தாலும், வலிமையான கரன்சியில் அமெரிக்க டாலர் கடைசியாக 10வது இடத்தில் உள்ளது. ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.83.10. ஒரு அமெரிக்க டாலருக்கு 82.9 என்ற மதிப்பில் இந்தியா 15வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் குவைத் தினார் அந்த நாட்டின் பொருளாதார நிலை, எண்ணெய் இருப்பு மற்றும் வரி இல்லாத அமைப்பு காரணமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *