ராமர் கோயில் நினைவு தபால் தலைகளை வெளியிட்ட பிரதமர் மோடி!

ராமர் கோயில் நினைவு தபால் தலைகளையும், உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் புத்தகத்தையும் பிரதமர் மோடி இன்ற்ய் வெளியிட்டார். 48 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் ஐ.நா., சபை, அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர், கனடா, கம்போடியா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள் வெளியிட்ட தபால் தலைகள் இடம் பெற்றுள்ளன.

ராமர் கோயில், கணேஷ், ஹனுமான், ஜடாயு, கேவத்ராஜ் மற்றும் மா ஷப்ரி உள்ளிட்ட 6 தபால் தலைகள் உள்ளன. தபால் தலைகளின் வடிவமைப்பில், ஸ்ரீராம ஜென்மபூமி கோயில் தொடர்பான முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது, i) ராமர் கோயில், ii) சௌபை ‘மங்கள் பவன் அமங்கல் ஹரி’, iii) சூரியன், iv) சரயு நதி, (v) கோவிலிலும் அதைச் சுற்றியுள்ள சிற்பங்களும் அடங்கும்.

சூரியக் கதிர்களின் தங்க இலையானது இந்த தபால் தலைகளுக்கு நல்ல தோற்றத்தை அளிக்கிறது. பஞ்சபூதங்கள் என அழைக்கப்படும் வானம், காற்று, நெருப்பு, பூமி மற்றும் நீர் ஆகிய ஐந்து கூறுகள், பல்வேறு வடிவமைப்புகளின் மூலம் பிரதிபலிக்கப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, ராமர் கோயில் நினைவு தபால் தலைகளையும், உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் புத்தகத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *