உங்களுடைய இஷ்ட தெய்வம் ஏதாவது ஒரு பெண் தெய்வமா ?
ஆமாம் என்றால்
நீங்கள் ஏதாவது ஒரு பௌர்ணமி அன்று கண்டிப்பாக திருமீயச்சூர் சென்று அன்னை லலிதாம்பிகையை தரிசனம் செய்ய வேண்டும்.
இது மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமீயச்சூர் அமைந்துள்ளது.
இங்கே இஞ்சிமேடு என்ற ஊருக்கு முதலில் செல்ல வேண்டும்.
அங்கே உள்ள சிவாலயத்தில் இருக்கும் வராகித் தாயை முதலில் வழிபட வேண்டும்!!!
அதன் பிறகு அம்பர் மாகாளம் என்ற ஊருக்கு செல்ல வேண்டும்.
அங்கே உள்ள சிவாலயத்தில் ராஜ சியாமளா அன்னையை வழிபட வேண்டும் !!!
அதன் பிறகு தான் பேரளம் அருகில் உள்ள திருமீயச்சூருக்கு வரவேண்டும்.
அவ்வாறு வந்து இங்கே இருந்து பிரபஞ்சத்தை ஆட்சி செய்யும் அன்னை லலிதாம்பிகையை சரணடைய வேண்டும் .
அன்னை லலிதாம்பிகையின் முதல் மந்திரி வராகி !!!இரண்டாவது மந்திரி ராஜ சியாமளா !!!
இந்த இரண்டு தாயார்களின் தரிசனத்தை பெற்ற பிறகு
தலைமை தாய்
ஸ்ரீ சக்கரத்தின் தலைமை அன்னை
நம் அனைவருக்கும் உடலுக்குள் இயங்கும் சக்தியாக சக்தி சொரூபமாக இருக்கும்
லலிதாம்பிகையை வழிபட வேண்டும்.
உலகம் முழுவதும் பல கோடி மக்களால் தினமும் பாராயணம் செய்யப்பட்டு வரும் லலிதா சகஸ்ரநாமம் பிறந்த ஊர் இதுதான்!!!
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் குறுக்காக வரும் பாதை தான்
கும்பகோணம் -காரைக்கால் செல்லும் பாதை
இந்த சாலைகள் இணையும் இடத்தில் அமைந்திருக்கும் ஊர் தான் பேரளம் ஆகும் .
இந்த பேரளம் ஊரிலிருந்து மேற்கு திசையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வயல் வெளிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் ஊர் தான் திருமீயச்சூர் ஆகும்.
முதல் யுகமான கிருதயுகம் காலத்தில் ஒருவர் ஜாதகத்தில் 5 கிரகங்கள் மட்டுமே இயங்கி வந்தன.
இரண்டாம் விதமான திரோதா யுகத்தில் ஏழு கிரகங்களாக ஒருவர் ஜாதகத்தில் அதிகரித்தன!
இந்த யுகத்தின் முடிவில் தான் ராமாயணம் நடைபெற்றது .
மூன்றாம் யுகமான துவாபர யுகத்தின் முடிவில் ஒருவர் ஜாதகத்தில் ஒன்பது கிரகங்கள் இயங்க ஆரம்பித்தன.
ஆனால் நவகிரகங்களை மனிதர்கள் வழிபட ஆரம்பிக்கும் காலத்திற்கு முன்பாகவே உண்டான கோவில்தான் இந்த திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயில் !!!
இந்த கோவிலின் முழு பெயர் அருள்மிகு லலிதாம்பிகை உடனுறை மேகநாதன் திருக்கோயில்!!!
இங்கே நவகிரக லிங்கங்கள் என்று 12 நாகங்கள் செதுக்கப்பட்ட லிங்கங்கள் உள்ளன.