ஒரு நாட்டில் அதிக சிக்சர்கள்.. தோனி, கெயில் இல்லை.. ரோகித் சர்மா படைத்த மாஸ் சாதனை

கிரிக்கெட்டில் சிக்சர் அடிப்பது என்பது ஒரு அரிய கலை.

அதற்கு பலம் மட்டும் இருந்தால் போதாது. ஷார்டின் டைமிங் மிகவும் முக்கியம். பந்து வரும் நேரமும் பேட் படும் நேரமும் சரியாக அமைந்து போதிய சக்தி இருந்தால் மட்டுமே பந்து பௌண்டரியை தாண்டும். இது குறித்து கவாஸ்கர் அழகாக சொல்வார்.

சக்தி மட்டும் சிக்ஸர் அடிக்க தேவை என்றால் மல்யுத்த வீரர்களை தவிர வேறு யாராலும் சிக்சர் அடிக்க முடியாது என்று கூறுவார். அந்த வகையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஏற்கனவே ரோகித் சர்மா நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்று நம் அனைவருக்குமே தெரியும். இந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் என்ற ஒரு தனி பட்டியலை பார்த்தால் அதிலும் ரோகித் சர்மா தான் முதலிடத்தில் இருக்கிறார்.

ஒரு நாட்டில் 300 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மாவுக்கு தான் சேரும். ரோஹித் சர்மா இந்தியாவில் மட்டும் 31 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். இதேபோன்று நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் 256 சிக்ஸர்களும், பிராண்டன் மெக்குல்லம் 230 சிக்சர்களும் அடித்திருக்கிறார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *