டி20 வரலாற்றில் ஆயிரம் பவுண்டரி… ரோகித் சர்மா புதிய சாதனை.. அதிக 4 அடித்த வீரர்கள் பட்டியல்
நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா 69 பந்துகளில் 121 ரன்கள் விளாசினார்.
இதில் 11 பவுண்டர்களும்ழ்எட்டு இமாலய சிக்சர்களும் அடங்கும். இந்த நிலையில் அனைத்து விதமான டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் ஆயிரம் பவுண்டரிகளை அடித்த வீரர் என்ற பெருமை ரோகித் சர்மா படைத்திருக்கிறார்.
இந்த நிலையில் டி20 வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் பிடித்திருப்பவர் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ். இவர் 1317 பவுண்டரிகள் அடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் டேவிட் வார்னர் 1183 பவுண்டரிகள் அடித்து உள்ளார். மூன்றாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 1132 பவுண்டரிகள் அடித்திருக்கிறார்.
ஜேம்ஸ் வின்ஸ் 1095 பவுண்டரிகளும், ஆரோன் பிஞ்ச் 1095 பௌண்டரிகளும் அடித்து முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்கள். இந்தியாவின் சிக்கர் தவான் 1090 பௌண்டரிகளை அடித்து ஆறாம் இடத்தில் இருக்கிறார். நட்சத்திர வீரர் விராட் கோலி 1074 பவுண்டரிகள் அடித்து ஏழாவது இடத்தில் இருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 1015 பவுண்டரிகள் அடித்து எட்டாவது இடத்தில் இருக்கிறார். 1013 பவுண்டரிகள் அடித்து பாகிஸ்தான் வீரர் சோயுப் மாலிக் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். சரியாக ஆயிரம் பவுண்டரிகள்
அடித்து ரோகித் சர்மா பத்தாவது இடத்தில் இருக்கிறார். இந்தியாவுக்காக அதிக ஆட்ட நாயகன் விருது வாங்கிய வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.