சனியும் சுக்கிரனும் லாபம் தரும் ராசிகள்
நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருவதால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
செல்வம் செழிப்பு ஆடம்பரம் மகிழ்ச்சி உள்ளிட்டவர்களுக்கு காரணியாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். இவர் ஆடம்பரத்தின் கடவுளாக விளங்கி வருகிறார். ஒரு ராசிக்கு செல்ல இவர் ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார்.
சனிபகவான் தற்போது அவரது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். ஒரு 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். ஒரு 2024 ஆம் ஆண்டு சுக்கிர பகவான் சனியோடு சேர உள்ளார். இதன் காரணமாக வரக்கூடிய புத்தாண்டில் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி
சனி மற்றும் சித்திரன் உங்களுக்கு மங்கள யோகத்தை கொடுக்க உள்ளனர். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் லாபம் இருமடங்காக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
மகர ராசி
சனி மற்றும் சுக்கிரன் உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கப் போகின்றனர். பண வரவில் எந்த குறையும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வழக்கத்தை விட வருமானம் அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மேஷ ராசி
சனி மற்றும் சுக்கிரன் உங்களுக்கு நன்மைகளை கொடுக்கப் போகின்றனர். வருமானத்திற்கு எந்த குறையும் இல்லாமல் இருக்கும் புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.