AUS vs WI: அறிமுகமான முதல் டெஸ்டின் முதல் பந்திலேயே விக்கெட்.. 85 ஆண்டுகால சாதனையை சமன் செய்த ஷமர் ஜோசப்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25ன் கீழ் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் உள்ள அடிலெய்சு ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான ஜஸ்டின் கிரீவ்ஸ், குவான் ஹாட்ஸ் மற்றும் ஷமர் ஜோசப் ஆகிய மூன்று வீரர்கள் அறிமுகமாகினர்.
இதில், ஷமர் ஜோசப் பேட் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதில் பேட்டிங்கின்போது, ஷமர் ஜோசப் 31 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 36 ரன்கள் எடுத்தார். 11வது இடத்தில் பேட்டிங் செய்த அவட், இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இரண்டாவது சிறந்த ஸ்கோர் அடித்திருந்தார்.
பந்துவீச்சின்போது ஷமர் ஜோசப், தற்போதைய காலத்தின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித்தை அவரது டெஸ்ட் வாழ்க்கையின் முதல் பந்திலேயே வெளியேற்றினார்.ஷமர் ஜோசப்பின் பந்தில் ஸ்மித், ஸ்லிப்பில் இருந்த ஜஸ்டின் கிரீவ்ஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
சாதனை படைத்த ஷமர் ஜோசப்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் பந்து வீச்சிலேயே விக்கெட்டை வீழ்த்திய இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஷமர் ஆனார். 1939 ஆம் ஆண்டு ஓவலில் இங்கிலாந்துக்கு எதிராக மைல்கல்லை எட்டிய முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் டைரல் ஜான்சனின் சாதனையை கிட்டத்தட்ட 85 ஆண்டுக்குபிம் சமன் செய்துள்ளார். 1939 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஜான்சன் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஒட்டுமொத்தமாக, ஆடவர் டெஸ்டில் தனது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய 23வது பந்து வீச்சாளர் ஆனார்.