மிகவும் நேர்மையான அரசாங்கம்… பெரும் சலசலப்பை ஏற்படுத்திய சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரனின் கைது

மிகவும் நேர்மையான நிர்வாகம் என கொண்டாடப்படும் சிங்கப்பூர் அரசாங்கத்தில், அமைச்சர் ஒருவர் ஊழல் வழக்கில் கைதாகியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊழல் வழக்கில் கைது

சிங்கப்பூர் அரசாங்கத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் ஈஸ்வரன் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, அவர் மீது 27 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதில் மக்கள் சேவையில் இருந்துகொண்டு ஆதாயம் பெற்றுள்ளார் என 24 குற்றச்சாட்டுகளும், ஊழலில் ஈடுபட்டார் என இரண்டு குற்றச்சாட்டுகளும், நீதி விசாரணையை தடுக்க முயன்றார் என ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொடர்புடைய 27 குற்றச்சாட்டுகளையும் அமைச்சர் ஈஸ்வரன் மறுத்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அமைச்சர் ஈஸ்வரன் மற்றும் பெரும் தொழிலதிபர் Ong Beng Seng ஆகிய இருவரின் கைது நடவடிக்கையானது சிங்கப்பூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

மட்டுமின்றி, இந்த இருவருமே கடந்த 2008ல் Formula One Grand Prix போட்டிகளை சிங்கப்பூருக்கு அறிமுகம் செய்தவர்கள். ஊழல் வழக்கில் சிக்கி அமைச்சர் ஈஸ்வரன் கைதான நிலையில், விசாரணை முடியும் வரையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியிருக்க கோரப்பட்டுள்ளது.

இருப்பினும் மாத சம்பளமான 3,500 பவுண்டுகள் (S$6,000) தொகையை தற்போதும் பெற்று வருகிறார். அமைச்சராக பொறுப்பில் இருந்த போது அவர் மாதம் S$46,750 தொகையை சம்பளமாக பெற்று வந்தார்.

மாத சம்பளத்தில் 82 சதவிகிதம்

ஆனால் தற்போது ஊழல் வழக்கில் அவர் கைதான நிலையில், அவரது மாத சம்பளத்தில் 82 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரை பொறுத்தமட்டில் அமைச்சர்களுக்கு உலகிலேயே அதிக தொகையை மாத சம்பளமாக வழங்குகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *