பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் மருத்துவமனையில் அனுமதி: அவரின் தற்போதைய நிலை என்ன?
பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கேட் மிடில்டனுக்கு அறுவை சிகிச்சை
பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் வயிற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு, இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் ஓய்வில் இருப்பார் என்று கென்சிங்டன் அரண்மனை(Kensington Palace) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், 42 வயதான இளவரசி கேட் மிடில்டன்(Kate Middleton) நேற்று மத்திய லண்டனில் உள்ள “தி லண்டன் கிளினிக்”(The London Clinic) என்ற தனியார் மருத்துவமனையில் வயிற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து இருப்பதாகவும், ஓய்விற்காக 10 முதல் 14 நாட்கள் மருத்துவமனையில் இருந்த பிறகு வீட்டிற்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட் மிடில்டனின் தற்போதைய மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் ஈஸ்டர் பிறகு ராஜாங்க வேலைக்கு திரும்ப வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.