100% மனிதர்களை கொல்லும் வைரசை ஆய்வு செய்யும் சீனா – உலக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

100% மனிதர்களை கொல்லும் திறனுடைய கொடிய வைரசை வைத்து சீனா ஆய்வு செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

சீனாவின் அடுத்த திட்டம்

கடந்த மூன்று ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரை சீனா பறித்தது.

இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனாவின் ஜே.என். வகை வைரசின் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 100% மனிதர்களை கொல்லும் திறனுடைய கொடிய வைரசை வைத்து சீனா ஆய்வு செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

கொரோனா போன்ற வைரசை எலிகளுக்கு கொடுத்து, அதை வைத்து சீன ராணுவத்திடம் இருந்து பயிற்சி பெற்ற வைத்தியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதில் 4 எலிகளை தேர்வு செய்து, வைரசையும் உட்செலுத்தி என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றி கண்காணித்து வருகின்றனர்.

இதே பரிசோதனையானது வேறு 4 எலிகளுக்கு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் வைரஸ் உட்செலுத்தப்படவில்லை.

வைரசால் தொற்று ஏற்பட்ட அனைத்து எலிகளும் 7 முதல் 8 நாட்களில் உயிரிழந்து விட்டன. 5 நாட்களில் உடல் எடையும் குறைந்துள்ளது. அவற்றின் கண்களும் வெளிறி காணப்பட்டுள்ளது.

இது மனிதர்களிடையே பரவினால் கொடிய தாக்கங்களை ஏற்படுத்த கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சீனாவின் உகான் நகரில் ஆய்வகத்தில் வைத்து தான் கொரோனா தொற்றுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான அறிக்கையை உலக சுகாதார அமைப்பு சமர்ப்பிக்கும்படி கூறியிருந்தது.

ஆனால் இதுவரையில் சீன அரசாங்கம் அதை செய்யவில்லை. இந்நிலையில் இந்த ஆய்வானது உலக மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

நிலவும் குளிர்காலத்தினாலும் வருகிற இளவேனில் காலத்திலும் பல்வேறு சுவாச நோய்கள் பரவும். இதனால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படிருந்தது.

இந்நிலையில் இந்த ஆய்வையும் மேற்கொண்டு வருவதால் தொற்று பரவாமல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *