பகீர்… 17 பேருக்கு அறுவை சிகிச்சையில் பறிபோன கண்பார்வை !
இந்த முகாமில் பரிசோதனைகள் நிறைவடைந்த பிறகு ஒரே நேரத்தில் 17 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. சிகிச்சை முடிந்த ஓரிரு நாட்களுக்கு பின், இதில் சிலருக்கு கண்பார்வை பறிபோனதாகவும், மேலும் சிலருக்கு பார்வைத் திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததன் பேரில், தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 9 பேர் கொண்ட குழுவையும் மாநில சுகாதாரத்துறை நியமித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதன் அடிப்படையில் குஜராத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நேற்று விசாரணை நடத்தியது. இது குறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டு இருப்பது பெரும் வேதனையை தருகிறது. இந்த சிகிச்சையின் போது அளிக்கப்பட்ட மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் மருத்துவ நெறிமுறைகளுக்கு உட்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்தும் விசாரணைகளும் ஆய்வும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானதில் இதுவரை சட்டரீதியாக எந்த நடவடிக்கையையும் மாநில அரசு எடுக்கவில்லை. போலீஸார் தங்களின் பொறுப்பை உணர்ந்து, இந்த வழக்கில் தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் கண்பார்வை பறிபோனவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். இச்சம்பவம் குறித்து இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மாநில சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும். இது குறித்த மேலதிக விசாரணைகள் பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.