பாதாமில் இவ்வளவு நன்மைகளா..? தினமும் 5 பாதாம்.. இப்படி சாப்பிட்டு பாருங்க..!!
விட்டமின் பி2, விட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் சத்துக்கள் பாதாமில் நிறைந்துள்ளது.
பாதாமை அப்படியே சாப்பிடுவதைவிட நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் அதன் நன்மைகள் அதிக அளவு கிடைக்கப்பெறும். 4 அல்லது 5 பாதாம்களை இரவு தண்ணீரில் ஊற போட்டுவிட்டு காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பாதாமை தோலை உரித்து சாப்பிட வேண்டும்
- ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும். இது செரிமானத்திற்கு உதவும்.
- பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது நாம் வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளும் நீங்கிவிடும்.
- விட்டமின் ஈ அதிக அளவு நிறைந்துள்ளதால் முகத்தில் ஏற்படும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி முகம் பொலிவாகும்.
- நீரில் ஊற வைத்த பாதாம்களில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் இருப்பதால் உடலில் உள்ள இறந்த செல்களிடமிருந்து நம்மை காக்கும்.
- பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் உடலில் கொழுப்பு சேர்வதை தடுத்து இதயத்தை பாதுகாக்கிறது.
- ஊற வைத்த பாதம் சாப்பிடுவதால் மூளையின் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இது ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும்.
- ஊற வைத்த பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைவதோடு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.