மகர ராசி டூ கும்ப ராசி.!! இன்று மாலை இடம்பெயர்ந்தார் சனிபகவான்.!!
உலகப் புகழ் பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் புதுச்சேரி, காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலில் சனீஸ்வர பகவான் கிழக்கு நோக்கிஅமர்ந்தபடி அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசித்தார். இதன் காரணமாக இன்று மாலை சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இந்த சிறப்பு தரிசனத்தை காண லட்சக்கணக்கான திருநள்ளாறில் குவிந்திருந்தனர். மேலும் பக்தர்கள் அனைவரும் சனிபகவானை தரிசனம் செய்ய இன்று மாலை முதல் நாளை மாலை வரை என 24 மணிநேரமும் கோவில் நடை மூடாமல் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் சனிப்பெயர்ச்சிக்கு வருகை தந்து சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.