புதுவை கடற்கரையில் வைர மோதிரத்தை தொலைத்த மாணவி; 5 மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

டெல்லி நொய்டாவைச் சேர்ந்தவர் அனில் கண்ணா, இவரது மகள் ஆஸ்தா கண்ணா (வயது 19). சட்டக்கல்லூரியில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் டெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்து தவளகுப்பம் பகுதியில் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரையில் தந்தை, மகள் இருவரும் அமர்ந்திருந்து கடற்கரையின் அழகை ரசித்துள்ளனர். அப்போது ஆஸ்தா கண்ணா அணிந்திருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான வைர மோத்திரம் கையில் இருந்து தவறி கடல் பகுதியில் கொட்டப்பட்டிருந்த கற்களுக்கு நடுவே விழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது தந்தை உடன் பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்து மோத்திரத்தை கண்டு பிடித்து தறுமாறு கேட்டு கொண்டனர். இதனை அடுத்து பெரிய கடை போலீசார், தீயனைப்பு துறையினர் உதவியுடன் இன்று காலை தந்தை, மகள் கடற்கரையில் அமர்ந்திருந்த இடத்தில் 5 மணி நேரமாக தேடிய போது வைர மோதிரம் கற்களுக்கு நடுவே இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து மோதிரத்தை போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் கடற்கரையில் தொலைந்த விலை உயர்ந்த மோத்திரத்தை காவலர்கள் மீட்டு கொடுத்த நிகழ்வு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *