பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் இதோ..
பிரசார் பாரதி நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி Casual Editor, NewsReader cum Translator ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு (Journalism) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள், தங்கள் தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் பெறுவார்கள். 21 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்னப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 266 ஆகும். மற்ற பிரிவினர் ரூ.354 செலுத்த வேண்டும்.
தகுதியும் ஆர்வமும் கொண்ட விண்ணப்பதாரர்கள், வரும் 27-ம் தேதிக்குள் (27.01.2024) அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கவுகாத்தி முனிசிபல் பிராந்தியத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் பிரசார் பாரதியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தைப் பெற்று, அதே முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கடைசித் தேதி: விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 27.01.2024.