மக்கள் அதிர்ச்சி.! சென்னையில் பறக்கும் ரயில் பாலம் சரிந்து விபத்து..!
சென்னையில் கடற்கரை – தாம்பரம் மற்றும் கடற்கரை – வேளச்சேரி ஆகிய ரயில் போக்குவரத்து பிரதானமாக உள்ளது. இதில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் பாதையாக உள்ளது.
இதனிடையே பயண நேரத்தை குறைக்க வேளச்சேரி முதல் கிண்டி வரை பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் பாலம் இன்று திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.மேலும் பாலம் சரிந்த இந்த விபத்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.