கேப்டன் விஜயகாந்த்தின் மறைவுக்கு பின் தேமுதிக அலுவலகத்தில் முக்கிய நிகழ்வு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் கேப்டன் விஜகாந்த் .தனக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு சேவை செய்ய தேமுதிக என்ற கட்சியையும் ஆரம்பித்து சினிமா அரசியல் என இரண்டிலும் கலக்கி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக வீட்டிலும் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வந்த கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார் .இதையடுத்து கடும் உடல்நல குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் சிகிச்சை பலன் இன்றி கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கேப்டனின் மறைவு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவரது உடலுக்கு பொதுமக்கள் திரையுலகினர் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கேப்டன் விஜயகாந்த் மறைந்து திட்டத்தட்ட ஒரு மாதம் ஆகி இருக்கும் நிலையில் தற்போது அவரது மறைவுக்கு பின் முக்கிய நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளதாக தேமுதிக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது :

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்கள் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *