வரும் 22 ஆம் தேதி ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை – ஒன்றிய அரசு..!
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா ஜன.22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல மாநிலங்களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல கோவா மற்றும் சண்டிகர் மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது போக பல்வேறு மாநிலங்களில் ஜன.22 ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசு ஊழியர்களும் கும்பாபிஷேக தினத்தையொட்டி விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதனால், ஊழியர்களின் உணர்விற்கு மதிப்பளித்து ஒன்றிய அரசின் அனைத்து ஊழியர்களுக்கும் மதியத்திற்கு மேல் அரை நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.