சிம்பு இத பாத்த ரொம்ப பொறாமைப்படுவாரு.. ஹன்சிகாவுக்கு இவ்ளோ விலை உயர்ந்த காரு பரிசா கிடைச்சதா! கொடுத்தது யாரு
ஈஸ்வரன் பட ஷூட்டிங்கைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டில் நடிகர் எஸ்டிஆர் (சிம்பு)-க்கு அவரது அம்மா உஷா ராஜேந்தர் சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கினார். மினி கன்ட்ரீமேன் எஸ் (Mini Countryman S) காரையே அவர் பரிசாக வழங்கினார். இந்த காரின் மதிப்பு 42 லட்ச ரூபாய்க்கும் அதிகம் ஆகும்.
இந்த காரின் விலைக்கே மிகப் பெரிய அளவில் டஃப் கொடுக்கும் காரையே பரிசாக பெற்றிருக்கின்றார் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி. இந்த கார் பரிசளிப்பு ஹன்சிகா மோத்வானியின் குடும்பத்தினர்களால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. புத்தம் புதிய பிஎம்டபிள்யூ 6 ஜிடி (BMW 6 GT) சொகுசு காரே அவருக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதன் மதிப்பு ரூ. 75 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது உங்களுக்கு எப்படி தெரியும் என்கிற சந்தேகம் எழும்பியிருக்கலாம். இந்த தகவலை நடிகையே ஓர் பதிவாக அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். இதன் வாயிலாக அவருடைய குடும்பத்தினர் வாயிலாக பிஎம்டபிள்யூ 6 ஜிடி சொகுசு கார் ஹன்சிகாவிற்கு பரிசாக வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
மேலும், ஹன்சிகா மோத்வானி அந்த புதிய காரில் பயணிக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. அந்த காரில் ஹன்சிகா மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் சிலரும் பயணித்திருக்கின்றனர். கார் பரிசளிப்பிற்கான துள்ளியமான காரணம் தெரியவில்லை. இருப்பினும், இந்த கார் பரிசளிப்பு சம்பவம் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
ஹன்சிகா கை வசம் வந்திருப்பது 6ஜிடி மாடலின் 630ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட் ஆகும். இது ஓர் கிராண்ட் டூரர் வெர்ஷன் ஆகும். இதனால்தான் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பை இந்த கார் மாடல் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
மிகப் பெரிய கேபினைக் கொண்ட கார் மாடலாக இதுக் காட்சியளிக்கின்றது. ஆகையால், அதிக இட வசதியைப் பெற்ற வண்ணம் இந்த காரில் பயணிக்க முடியும். இத்துடன் சொகுசான டிராவல் அனுபவத்தைப் பெற வேண்டி இந்த கார் மாடலில் பற்பல சிறப்பம்சங்களை பிம்டபிள்யூ இந்த காரில் வாரி வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஏர் சஸ்பென்ஷன், பேடில் ஷிஃப்டர்கள், எலெக்ட்ரோ பிளேட்டட் கன்ட்ரோல்கள், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் ரோல்லர் சன் பிளைன்ட், பனோரமிக் சன்ரூஃப் போன்ற பிரீிமியம் தர அம்சங்கள் பல பிஎம்டபிள்யூ 6ஜிடி சொகுசு காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் இருக்கைகள், பவர்டு டெயில்கேட், 7.0 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் பிஎம்டபிள்யூ 6 ஜிடி காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், பிரேக் அசிஸ்ட் வசதிக் கொண்ட ஏபிஎஸ், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டைனமிக் டிராக்சன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் டிஃப் லாக் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில், முக்கியமாக 630ஐ எம் ஸ்போர்ட் வேரியண்டில் பிஎஸ்6 தர 2.0 லிட்டர் டர்போசார்ஜட் இன்லைன் 4 சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 254 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். மேலும், இதனால் வெறும் 6.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இத்தகைய சூப்பரான திறனை வெளிப்படுத்தக் கூடிய காரையே பரிசாக பெற்றிருக்கின்றார் ஹன்சிகா.
ஹன்சிகா கை வசம் சேர்ந்த முதல் சொகுசு கார் இது என நினைத்துக் கொள்ள வேண்டாம். இவரிடத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட அரிய வகை ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில், பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் 350 சிடிஐ, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், ஜாகுவார் எக்ஸ்இ உள்ளிட்ட கார்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.