சின்னத்திரையில் நடுவராக நடிகை ஸ்ரீதேவி!
சின்னத்திரையில் ஒளிபரப்பாகவுள்ள ஜோடி நடன நிகழ்ச்சியின் நடுவராக நடிகை ஸ்ரீதேவி பங்கேற்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.
அதன்படி சூப்பர் சிங்கர், பிக் பாஸ், கலக்க போது யாரு, குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த 2006-ல் ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி 10 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.
விஜய் டிவியில் நடனத்துக்கு முக்கியத்துவம் அளித்து நிகழ்ச்சிகளில் ‘உங்களில் யார் அடுத்த பிரவுதேவா’ நிகழ்ச்சியும் ஒன்று. இதில் பங்கேற்ற பலர் சினிமாவில் பிரபலங்களாக ஜொலித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதன் பிறகு எந்த ஒரு நடன நிகழ்ச்சியும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவில்லை.
இந்த நிலையில், தற்போது விஜய் டிவியில் ‘ஜோடி ஆர் யூ ரெடி’ என்ற புதிய நடன நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதில் நடிகை மீனா, நடன இயக்குநர் சாண்டி மற்றும் நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி ஆகிய மூவர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.