இது தெரியுமா ? கிராமப்புரங்களில் ஒரு சில வியாதிகளுக்கும் இதை பயன்படுத்துகிறார்கள்..!

நாம் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தும் இஞ்சியை கிராமப்புரங்களில் ஒரு சில வியாதிகளுக்கும் இதை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் நகரத்தில் வாழும் மககள் இதன் அருமை புரியாமல் கண்ட சிகிச்சையை எடுத்துக்கொண்டு உடலை கெடுத்துக் கொள்கின்றனர்.

எனவே இஞ்சியின் பயன்களை புரிந்துக்கொண்டு ஒரு சில நோய்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் அவற்றை குணப்படுத்தலாம்.

* பிரசவத்தின் போது உண்டாகும் பொதுவான பிரச்சனைகளான குமட்டல், வாந்தி போன்றவைகளுக்கு இஞ்சி சாறினை குடித்து வந்தால், அவை எளிதில் குணமாகும்.

* கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு உணவு என்பது மருந்தாக தோன்றும். இது போன்ற நேரங்களில் இஞ்சியால் தயாரிக்கப்பட்ட ஊறுகாய், துவையல் போன்ற பொருட்கள் பசியினை தூண்டி, பசியின்மையைப் போக்குகிறது.

* கீமோதெரபி போன்ற சர்ஜரியின்போது உண்டாகும் குமட்டலை சரிசெய்கிறது.

* மூட்டுவலி, சதைப்பிடிப்புப் போன்ற வலிகளைக் குறைக்கும் மருந்தாகவும் இது பயன்படுகிறது.

* கடுமையான போதையையும் முறிக்கும் சக்தி இஞ்சிக்கு இருப்பதாக அறிஞர்கள் பலரும் கண்டறிந்துள்ளனர்.

* இஞ்சிச் சாற்றை வாள சம்பந்தப்பட்டபேதிமாத்திரையுடன் அனுபானமாககச் சேர்த்துக் கொடுப்பர்.

* இது மருந்தின் குணத்தை அதிகப்படுத்துவதோடு குடல் இரைப்பை முதலிய உறுப்புகளிலுள்ள மாசை வெளியாக்கும்.

* ஒரு தோலா எடையுள்ள இஞ்சியை அரைத்துப் பிழிந்தெடுத்த சாற்றுடன் ஒரு கோழிமுட்டையின் மஞ்சள் கருவைக்கூட்டிநன்றாக அடித்து, கரண்டியிலிட்டு சிறிது நெய் விட்டு, நீர் சுண்டி வெந்த பதத்தில் உட்கொள்ளலாம்.

* தீனிப்பை, ஈரல் ஆகியவைகளுக்குப் பலத்தை கொடுக்கும்

* நினைவாற்றலை அதிகப்படுத்தும்.

* ஒரு இஞ்சித் துண்டை வாயிலிட்டு அடக்கி வைத்து கொண்டிருந்தால் தாகம் அடங்கும்…

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *