இது தெரியுமா ? இட்லிப்பொடி செய்யும்பொழுது சிறிது கறிவேப்பிலையையும் போட்டு மிக்ஸியில் பொடித்தால்
* பஜ்ஜி மாவுடன் ஒரு வெங்காயம் மூன்று பூண்டுப் பற்கள், சிறிது சோம்பு முதலியவற்றை நைஸாக அரைத்துக் கலந்து பஜ்ஜி செய்தால் சுவையோ சுவை.
* தேயிலைத்தூள் வாங்கி பாட்டிலில் கொட்டி வைக்கும்போதே அதில் இரண்டு ஏலக்காயையும் பொடித்துப் போட்டு கலக்கிவிட்டால் ஏலக்காய் தேநீர் கமகமக்கும்.
* இட்லிப்பொடி செய்யும்பொழுது சிறிது கறிவேப்பிலையையும் போட்டு மிக்ஸியில் பொடித்தால் பொடி ருசியாக இருக்கும்.
* வறுத்த புழுங்கல் அரிசியை மாவாக்கி வைத்துக்கொண்டால் கூட்டு கறிகளை இறக்கும்போது லேசாகத் தூவி இறக்கினால் மணமாக இருக்கும்.
* இட்லி மாவில் ஒரு வெற்றிலையைப் போட்டு வைத்தால் மாவு பொங்கி வழியாது, அதிகம் புளிக்காது.
* பயத்தம் பருப்பு சுண்டல் செய்யும்போது பருப்பை வாசனை வரும்படி வறுத்துவிட்டுச் செய்தால் சுண்டல் உதிரி உதிரியாக வரும்.
* பட்டாணி சூப் செய்யும்போது ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து பொடி செய்து அதில் சேர்த்துக் கொதிக்க விட்டால் கெட்டியான சூப் கிடைக்கும்.
* உளுந்து வடை மாவு ரொம்ப நீர்த்துப்போய் விட்டால் அந்த மாவுடன் கொஞ்சம் அவலைக் கலந்து வடை தட்டினால் வடை சுவையாக இருக்கும்.
* கலந்த சாதம், விஜிடபிள், பிரியாணி போன்றவை பொலபொலவென்று இருக்க குக்கர் மூடியைத் திறந்ததுமே சிறிது எலுமிச்சை சாறைவிட்டுக் கிளறிவிட வேண்டும்.
* பனீரை வெட்டும் கத்தியை சிறிது நேரம் கொதிக்கும் நீரில் போட்டு வைத்திருந்து பிறகு பனீரை வெட்டினால் உடையாமல் உதிராமல் துண்டங்களாக வெட்ட முடியும்.
* வாழைத்தண்டை நறுக்கிக் கொண்டிருக்கும்போது ஆள்காட்டி விரலில் நாரைச் சுற்றிக் கொண்டேயிருந்தால் மோதிரம் போல நார் திரண்டு வந்துவிடும்.
* ஆலு பரோட்டா செய்யும்போது பூரணம் வெளிவராமல் இருக்க மாவை கிண்ணம்போல் வடிவமைத்து ஆலுவை உள்ளே வைத்து மாவை நன்றாகச் சுற்றி மூடி செய்தால் பூரணம் வெளியே வராது.
* பருப்புடன் சிறிது எண்ணெயும், சிறிது பெருங்காயத் தூளையும் சேர்த்து வேகவிட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.
* கொழுக்கட்டை சொப்பு வெடிக்காமல் விரியாமல் இருக்க அரிசியுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.