யூரிக் அமிலத்தை குறைக்கும் சுலப வழி! மூட்டுவலியை விலக்க ஓமம்
யூரிக் அமிலம் அதுபோன்ர நோய்களில் ஒன்றாகும். யூரிக் அமிலம் என்பது உங்கள் உடலின் இயற்கையான கழிவுப் பொருளாகும், இது பியூரின்கள் எனப்படும் இரசாயனங்கள் உடைபடும்போது உருவாகிறது. நமது உடல் சிறுநீர் மற்றும் குடல் இயக்கம் மூலம் யூரிக் அமிலத்தை வெளியேற்றுகிறது.
ஆனால், உடல் அதிக யூரிக் அமிலத்தை உருவாக்கும் போது, அது இரத்தம் மற்றும் மூட்டுகளில் படிந்து வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலை கீல்வாதம் என்று அழைக்கப்படுகிறது, இது சிறுநீரக நோய்களுக்கும் வழிவகுக்கும். எனவே, யூரிக் அமிலத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
யூரிக் அமிலத்தைக் கட்டுபப்டுத்த ஓமம் செயல்படுகிறது மற்றும் அதை எவ்வாறு சேர்த்துக்கொள்ளலாம் என்பது குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
யூரிக் அமிலமும் ஓமமும்
உணவுகளுக்கு கசப்பான மற்றும் வித்தியாசமான சுவையை வழங்கும் ஓமம், செரிமானப் பிரச்சனைகளை சீர் செய்யும். சுவையை அதிகரிக்க இது பல உணவுகளில் சேர்க்கப்படும் ஓமம், சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், நிறைய ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. அஜ்வைனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உயர்ந்த யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
யூரிக் அமில வீட்டு வைத்தியம்
மூட்டுகளை யூரிம் அமிலம் பாதிக்காமல் இருக்க ஓமத்தை எப்படி பயன்படுத்துவது? தெரிந்துக் கொள்வோம்…
யூரிக் அமில பிரச்சனையில் இருந்து விடுபட காலையில் வெறும் வயிற்றில் ஓம தண்ணீர் அல்லது ஓமத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தலாம்.