வெறும் 2 மணி நேரத்தில் சென்னையில் இருந்து மைசூர் போகலாம் – திட்டம் தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம்..!
சென்னையில் இருந்து ெபங்களூர் வழியாக மைசூர் செல்ல தற்போது சுமார் 10 மணி நேரம் ஆகிறது. புல்லட் ரயில் பணிகள் முடிவடைந்தால், சென்னையில் இருந்து மைசூர் செல்ல இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் ஆகும். இந்த புல்லட் ரயிலை ஆந்திர மாநிலத்தில் ஒருங்கிணைந்த சித்தூர் மாவட்டம் வழியாக இயக்க ரயில்வே அதிகாரிகள் வரைவுத் திட்டத்தை வகுத்துள்ளனர்.
கர்நாடகா மற்றும் தமிழக எல்லையை ஒட்டிய பகுதியான சித்தூர் மாவட்டம் என்பதால், புல்லட் ரயில் வருவதால், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வியாபாரம், கல்வி, மருத்துவம் என பல்வேறு பணிகளுக்காக சென்னை, பெங்களூரு செல்பவர்களுக்கு பயனுள்ளதாக அமைய உள்ளது.
சென்னை ஹார்டுவேர் துறையில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், மைசூர் மென்பொருள் துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த இரு மாநிலங்களுக்கும் மத்தியில் பொதுவான ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் வசிப்பவர்கள் பலர் கல்வி மற்றும் மருத்துவத்திற்காக பயணம் செய்கின்றனர். முறையான போக்குவரத்து வசதி இல்லாததால், ஒருங்கிணைந்த சித்தூர் மாவட்ட மக்கள் பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். கடந்த ரயில்வே பட்ஜெட்டில் சென்னை- மைசூர் இடையே புல்லட் ரயில் இயக்க மத்திய பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டது.
அதன்படி புல்லட் ரயிலுக்கு தனி ரயில் பாதை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளைப் எல் அண்ட் டி நிறுவனம் பெற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை- மைசூர் இடையே புல்லட் ரயிலை இயக்க 5 ஆண்டுகளுக்குள் பணிகள் முடிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் விதமாக 340 கிராமங்கள் வழியாக புல்லட் ரயிலை இயக்க அதிகாரிகள் டிபிஆர் வடிவமைத்துள்ளனர். பொதுவாக சென்னையில் இருந்து மைசூருக்கு ரயிலில் செல்ல சுமார் 10 மணி நேரம் ஆகும். அதே புல்லட் ரயிலில், 2 மணி நேரத்தில் இலக்கை அடைந்து விடலாம். இந்த புல்லட் ரயில், சித்தூர் நிறுத்தம் வழியாக மாவட்டத்தில் உள்ள 41 கிராமங்கள் வழியாக பயணிக்கும். இதற்காக 18 மீட்டர் அகலத்தில் 435 கி.மீ.வரை மேம்பாலம் கட்ட வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஏற்கனவே செயற்கைக்கோள் மற்றும் நில ஆய்வுகளை முடித்துள்ளது. புல்லட் ரயில் 750 பயணிகளுடன் மணிக்கு 250 முதல் 350 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. மேலும், குடிபாலா மண்டலத்தில் கொத்தப்பள்ளியில் சித்தூர் நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.