Radha Ravi: ஐஸ்வர்யா ராயை கெடுத்து இருப்பேன்.. ராதா ரவி சர்ச்சை பேச்சு!
சென்னை: தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான ராதா ரவி, தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
அவர் மூத்த தமிழ் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகன் மற்றும் தென்னிந்தியாவின் மற்றொரு பிரபல நடிகையான ராதிகாவின் சகோதரர் ஆவர். இவர் நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தை வைத்து இருக்கிறார் நடிகர் ராதா ரவி. மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் நடிகர் ராதாரவி. தமிழ் சினிமாவில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சரத்குமார் என டாப் நடிகர்கள் பலருக்கும் வில்லனாக நடித்துள்ள ராதா ரவி, தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நடிகர் ராதாரவி அடிக்கடி சினிமா பிரபலங்கள் குறித்து பேசி சர்ச்சையிலும் சிக்கிவிடுவார். அந்த வகையில், ராதா ரவி ஐஸ்வர்யா குறித்து பேசி பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், வட இந்திய நடிகைகளை இங்கு அழைத்து வந்து நடிக்க வைக்கிறார்கள். நம்ம ஊரில் நடிகைகளே இல்லையா? நம்ம ஊர் நடிகைகளை படங்களில் நடிக்க வைத்தால், படமும் சீக்கிரம் முடியும், லட்சக்கணக்கில் ஆகும் செலவையும் குறைக்கலாம்.
ராதா ரவி பேச்சு: ஆனால் எங்கிருந்தோ வரும் வட இந்திய ஆட்களை பிடித்து தமிழ் படத்தில் நடிக்க வைக்கிறீர்கள். அவர்கள் பொட்டுத்துணிக்கூட இல்லாமல் நடிக்கிறார்கள். அவர்கள் ஊரில் அணியும் ஆடையுடன் இங்கே வருகிறார்கள். அவர்களுக்கு நம்முடைய ஆடையை கொடுத்து அணிவித்து, நம்ம ஊரு பெண் போல் மாற்றிவிடுகிறீர்கள். அவர்களுக்கு தமிழும் வராது, உதட்டு அசைவும் வேறுமாதிரி இருக்கும். பின்ன எதற்கு வட இந்திய நடிகைகளை இங்கே நடிக்க வைக்கிறீர்கள் என்றே புரியவில்லை. தமிழ் நாட்டில் அழகான நடிகைகளே இல்லையா,தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
மோசமான பேச்சு: நல்லவேளை எனக்கு இந்தி தெரிந்திருந்தால் ஐஸ்வர்யா ராயை கெடுத்து இருப்பேன். நல்லவேளை எனக்கு இந்தி தெரியாது. அதாவது இந்தி தெரிந்திருந்தால் இந்தி படத்தில் வில்லனாக நடித்து ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன். ஏன்னா, நமக்கு அந்த வேஷம் தானே கொடுப்பாங்க என்று சொன்னேன் என்று பேசி இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள், மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து பேசிய போது, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. அதன்பேரில் அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை விட மோசமாக பேசிய ராதாரவி மீது அப்போது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.