இன்று நள்ளிரவு ஓடிடியில் வெளியாகிறது சலார்..!!
கே ஜி எஃப் 1 மற்றும் 2 உள்ளிட்ட பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கிய படம் சலார்.
பிரபாஸ் பிருதிவிராஜ், ஸ்ருதிஹாசன், ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரவி பஸ்ரூர் இதற்கு இசையமைத்துள்ளார். உயிருக்கு உயிரான இரு நண்பர்கள் எதிரிகளாக ஏன் மாறுகின்றனர் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சலார் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதே சமயம் படத்தின் இறுதியில் சலார் 2 – சௌர்யாகன பர்வம் படத்திற்கு லீட் கொடுத்து முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் சலார் 2 உருவாக இருப்பதாக படத்தின் இயக்குனர் சில தினங்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் இன்று நள்ளிரவில், அதாவது ஜனவரி 20 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.