உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால்…வருத்தம் தெரிவித்த நயன்தாரா!
நயன்தாராவின் 75 வது படமாக வெளியான படம் அன்னபூரணி.
இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தனர். கடந்த சில தினங்களாக அன்னபூரணி படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சில வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ஓடிடியில் வெளியான அன்னபூரணி படத்தையும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதிரடியாக நீக்கியது. இந்த விவகாரத்தில் நயன்தாராவின் அன்னபூரணி படத்திற்காக பல்வேறு தரப்பினரும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். அதேசமயம் எதிர்ப்புகளும் கிளம்பிய வண்ணம் இருந்தது.