ஏன் நிம்மதியை கெடுத்துட்டு.. நீ நிம்மதியா தூங்குறியா? மாமனார் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மருமகன்!

குடும்ப தகராறு காரணமாக தூங்கிக்கொண்டிருந்த மாமனார் தலையில் மருமகன் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மணியம்மை தெருவை சேர்ந்தவர் ஜமால் பாஷா (65). இவர் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சைதானி பி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் மனிஷாவைத் தனது உறவினரான மன்சூருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கோபித்துக்கொண்டு அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று ஒரிரு நாளில் திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். வழக்கம் போல மீண்டும் மன்சூர் – மனீஷா தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மனீஷா தனது குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த மன்சூர் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மாமனார் ஜமால் பாஷா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து வந்தார். பிரச்சனைகளுக்கு காரணம் மாமானார்தான் எனக் கூறியபடி வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த மாமனார் தலையில் மன்சூர் அலிகான் அம்மிக் கல்லை போட்டுள்ளார். இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜமால் பாஷா உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மன்சூர் அலிகானை கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குடும்ப தகராறில் சொந்த மாமனாரையே தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *